Tuesday, April 3, 2012

எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 114 ஆம் நினைவு தினமும் கனடா  கக்கூஸ்  செல்வராசாவும்!

புலிப்  பத்திரிகையொன்றில்  செல்வநாயகத்தின்  114  ஆம்  பிறந்த தினம்  என்றும்  தமிழர்களின்  தந்தையின்  விழாவுக்கு  வெள்ளம்  போலத்  திரண்டு வருக என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டு 31 -3 -2012  அன்று மாலை ஐந்து மணிக்கு விளம்பரப்படுத்தப்பட்ட முகவரிக்கு போனால் அது ஒரு வீடென்பது தெரிந்தது. வாசலில் கனடியக் கொடியும் தோட்டா மாலையுடன் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் புலித்தலையுடனான கொடியும் கட்டப்பட்டிருந்தது. அகிம்சை போராட்டம் நடத்திய செல்வநாயகத்தின் நினைவு தினத்துக்கு கொலைஇ கொள்ளைகள் மாத்திரம் நடத்திய புலிகளின் கொடியைக் கண்டவுடன் விலாசம் மாறி வந்து விட்டோமா என்றொரு சந்தேகம் வந்தது.
 
கதவைத் தட்டியவுடன் கதவைத் திறந்த ஆளைக் கண்டவுடன் அதிர்ந்தே போனார்கள். கதவைத் திறந்த ஆள் கனடாவில் நன்கறியப்பட்ட ஆட்கடத்தியும்இ கனடா கந்தசுவாமி ஆலையத்தின் உண்டியலையே ஒரு வழி பண்ணிய 'கக்கூஸ்' செல்வராசாதான் செல்வநாயகத்துக்கு விழா எடுக்கும் ஆசாமி என்பதும் தெரிந்தது. பேஸ்மென்டுக்குப் போனால் அங்கே கடலும் நிலமும் கடக்க முடியாத நாடுகடந்த அரசின் எம்பி மா.க. ஈழவேந்தன் நின்று கொண்டிருந்தார்.
 
அந்த வீட்டின் வரவேற்பறையில்  'தமிழ்', தமிழீழம்' என்று ஊரை அடித்து வாயில் போட்ட அத்தனை கேடிகளின் படங்களும் பெரிய பிரேம்கள் போடப்பட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. தமிழ் நாட்டுக் கேடி சீமானின் படம் கூட இருந்தது. பாவம் இந்த செல்வநாயகத்தின் படத்தைக் காணமுடியவில்லை. பேஸ் மென்டில் பிரபாகரன் அவனுடைய அப்பன் மலையாளத்தான் வேலுப்பிள்ளையின் படமும் இருந்தது. இந்த செல்வநாயகம் எங்கே என்று தேடினால் பெரிய பிரபாகரனின் படத்துக்குக் கீழே செல்வநாயகத்தின் படம் பதுங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒன்று மட்டும் புரிந்தது. தமிழரசுத் தந்தையை விட பிழைப்புத் தேடி வந்த மலையாளத்தான் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தை விட 'உசத்தி' என்ற விஷயம். வட்டுக் கோட்டைதீர்மானம்தான் தங்களுடையதும் என்று புலிக் கும்பல் ஊழையிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் அந்த தீர்மானத்தின் சிற்பிகளான செல்வநாயகம், அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு இந்த 'உண்டியல்' புலிகள் எந்த மரியாதையும் கொடுப்பதில்லை என்ற விஷயம் அங்கிருந்த படங்களைப் பார்த்த பின்னர்தான் புரிந்தது.
 
உள்ளே போனவுடன் அங்கிருந்த பத்து நபர்களைக் கண்டவுடன் 'செல்வநாயகமே உன் கதி இதுதானா' என்ற  எண்ணமே வந்தது. வந்திருந்தவர்களில் ஒருவர் 'உங்களுடைய கடல் கடந்த எம்.பி மார் வந்தாலே அரைவாசிக் கதிரைகள் நிறையும். என்ன ஒருவரையும் காணவில்லை' என்று ஈழவேந்தனிடம் கேட்க அவர் பதில் கூற முடியாது நெளிந்தார். உருத்திரகுமாரனின் உதவிப் பிரதமரான (போலி) டாக்டர் சிவலிங்கத்தைக் கூடக் காண முடியவில்லை.
 
தவிர 'உங்கள் கூட்டமொன்றில் போல் நியூமன் என்ற ஆள் இலங்கையில் முன்னாள் புலிகளுக்கு எந்த வித புனர்வாழ்வும் அளிக்கப்படுவதில்லை என்று சொன்னார். ஆனால் சம்பந்தன் அரசு புனர்வாழ்வு கொடுப்பதில் சிறப்பாகப் பணியாருகிறது என்று செய்திகள் சொல்லுகின்றன' என்றவுடன் ஈழவேந்த 'அப்படியா எனக்குத் தெரியாது' என்று அசடு வழிந்தார். அந்த செய்தியைத் தனக்கு ஈ மெயில் பண்ணும்படி தந்து உதவும்படி  விலாச மட்டைகளைப் பலருக்கும் கொடுத்தார். இலங்கையில் நடக்கும் விஷயங்கள் எதுவும் இந்த பன்னாடை நாடு கடந்த கோஷ்டிக்குத் தெரிவதில்லை என்ற விஷயம் அப்பொழுது புரிந்தது.
 
வந்திருந்த ஒருவர் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளரும் வட்டுக் கொட்டைத்தொகுதியைச் சேர்ந்தவருமாவார். அவர் 'இந்த நிகழ்வு செல்வனாயகத்துகுச் செய்யும் அவமரியாதை' என்று கருத்துத் தெரிவித்தார்.
 
ஐந்து மணிக்குக் கூட்டம் என்று அறிவித்து ஆறரை மணியாகியும் பத்துப் பேருக்கு மேலாக எவரும் வராததால் அங்கிருந்த சிலர் காப்பி குடிக்க வேண்டும் என்றும் புகை ஊத வேண்டும் என்றும் புறப்பட  அவர்களின் முழங்கைகளைப் பிடித்து காப்பி எல்லாம்  இங்கிருக்கிறது என்று சொல்லித் தடுக்க ஈழவேந்த முயல இல்லை வெளியில் போய் நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று சிலர் ஓட்டம் பிடித்தனர்.
 
கனடா கந்தசாமி ஆலயத்தை கத்தொலிக்கனான ரெஜி என்பானின் தலைமையில் 'பிடித்து' உண்டியலில் மாத்திரம் கண்ணாயிருந்த உலகத்தமிழர் கும்பல் இந்த கக்கூஸ் செல்வராசாவை பொருளாளராக நியமித்தனர். பின்னர் செல்வராசா உண்டியலில் கை வைத்து மோசடி செய்ததாக வன்னிக்கு அழைக்கப்பட்டு 'அடித்த' பணத்தைக் கட்டும்படி புலிகள் உத்தரவிட்டதுடன் செல்வராசாவை இயக்கத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளி வந்தன. இந்த செல்வராசாவும், அவனுடைய சகோதரனும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டு வேலை எதுவுமின்றியே பல வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்பதும் இன்னொரு செய்தி. இப்படியான முடிச்சுமாறிகளும்இ மொள்ள மாரிகளும்தான் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு விடுதலை எடுத்துக் கொடுக்கப் போகிறார்களாம்.
 
இதுதான் உருத்திரகுமாரன் கும்பலின் நிஜ வேஷம். இந்தக் கும்பல்கள் இன்னமும் தமிழர்களை ஏமாற்றி கொள்ளையடிக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதை விடத் தமாஷான விஷயம். இந்த உருத்திரகுமாரன் கும்பலின் பிரதான வேண்டுகோள் என்னவென்றால் 'காசு தா' என்பதுதான். எத்தனை இளிச்சவாயர்கள் இந்த மோசடிப் பேர்வழிகளுக்குக் காசு கொடுத்துத் தலையில் துண்டை போடுவார்களோ தெரியவில்லை.
 
இதற்கிடையில் நாடு கடந்த அரசின் மற்றொரு பிரதமாரான திருச்செல்வம் கும்பல் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிக்க தலை நகர் ஓட்டாவாவுக்குப் போகிறார்களாம். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கனடா இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதர்காகத்தான் இந்த நன்றி தெரிவிப்பாம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீகோண்டாவில் கோதண்டராமன்ஸ்ரீஸ்ரீஸ்ரீ

No comments:

Post a Comment