யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் இராணுவத்தினர் கடந்த இரண்டு வருடங்களில் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார்
இராணுவத்தின் உதவியுடன் இருதய சிகிச்சை செய்துகொண்ட யுவதியொருவரை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.சிவில் அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற இராஜதந்திரிகள் இராணுவக் குறைப்பு செய்யவேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். போரின் பின்னர் தொடர்ச்சியாக இராணுவத்தினர் குறைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
குறிப்பாக சிவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இவ்வாறான நடவடிக்கைகளை இராணுவ செய்து வருகின்றது. அதேபோல் தொடர்ச்சியாக பொது மக்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் இராணுவம் மேற்கொள்ளும் என்றார்.
.
No comments:
Post a Comment