இந்தோனேஷியாவை அண்மித்த பகுதி யில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள சுனாமிஎச்சரிக்கை கோபுரங்களில் 10கோபுரங்கள் செயற்படா திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் சில இடங்களில் செயற்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து குறித்த 10 கோபுரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் கரையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள 74 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 5 கோபுரங்கள் ஏற்கனவே செயலிழந்துள்ளதாகவும் மற்றைய 5 கோபுரங்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்றைய தினம் செயற்படாதிருந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் செயலிழந்துள்ள எச்சரிக்கை கோபுரங்களை துரித கதியில் திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடக விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி பணிப்பாளர் சரத்லால் குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்படாதிருந்த 5 கோபுரங்கள் தற்போது திருத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment