தலவாக்கலை லிந்துல வோல்ட்ரிம் தோட்டத்தில் தீ பரவல்: 10 வீடுகள் சேதம்
தலவாக்கலை – வோல்ட்ரிம் தோட்டத்தில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தோட்ட நெடுங்குடியிருப்பில் உள்ள 10 வீடுகள் தீயினால் சேதமடைந்துள்ளதாக லிந்துல பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மின்னொழுக்கின் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிராபத்துக்குள் எவையும் இடம்பெறவில்லை.ஆயினும், பொது மக்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment