Wednesday, April 11, 2012

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட நபருக்கு 10 வருட கடூழிய சிறை

ஒரு இலட்சத்து ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மற்றும் பென்டன் என்பனவற்றை கொள்ளை யிட்டமை மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தியமை ஆகிய குற்றச் சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நபருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி 10 வருட கால கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

அத்துடன் 10 வருட கால கடூழிய சிறைத் தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்களில் அனுபவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேஸ்திரிகே சுரேஷ் லஸந்த (29வயது) என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் தடுகம பிரதேசத்தில் வைத்து அசேல நந்த குமார என்பவரிடமிருந்த ஒரு இலட்சத்து ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியையும் பென்டனையும் கொள்ளையிட்டதாகவும், அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் பிரதிவாதி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதி இதற்கு முன்னரும் வழக்கொன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர் என இந்த வழக்கு விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதி வழக்கின் முறைப்பாட்டாளரை துப்பாக்கி காட்டி அச்சுறுத்தி தங்கச்சங்கிலியையும் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment