ஒரு இலட்சம் ரூபா மாத வேதனம் மற்றும் வேறு பல கொடுப்பனவுகளுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கையில், தினசரி 1 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா வேதனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ஒருவரை நியமிக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரேரணை அடங்கிய பத்திரம் தற்போது பணிப்பாளர் சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவின் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முகாமையாளர் ஒருவர் இருக்கையில் அதிக நிதி செலவிடப்பட்டு வெளிநாட்டு ஆலோசகர் ஒருவர் வரவழைக்கப்படுவதற்கு அவசியமில்லை என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment