Monday, April 9, 2012

யுத்த காலத்தில் இந்தியாவிற்குத் தப்பிச் வந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் அகதிகள் இந்தியாவில்

யுத்த காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் வந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் இலங்கை அகதிகள் இன்னும் இந்திய முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இந்தியாவில் உள்ளவர்களில் 23 ஆயிரம் பேர் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்காலிக வீடுகள் இன்றி நிரந்தர வீடுகள் அமைத்துத் தருவதானால் மாத்திரமே இலங்கை வர விரும்புவதாக அவர் கூறியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com