காலியில், கிரிக்கட் போட்டிகளை பார்வையிட அதிகளவான உல்லாச பிரயாணிகள்..
காலியில் நடைபெற்று கொண்டு இருக்கும் TEST கிரிக்கட் போட்டிகளை பார்வையிடுவதற்காக, இம்முறை ஒப்பீட்டளவில் அதிகமான வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை தெற்கு மாகாணத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மற்றும் காலியில் அமைந்துள்ள உல்லாச விடுதிகள் முற்றாக நிரம்பியுள்ளதாகவும், நேற்று நடைபெற்ற இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கட் போட்டியை பார்வையிடுவதற்காக 7000 வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் வருகைதந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றும் இலங்கை கிரிக்கட் சபை, போட்டிகளை பர்வையிடுவதற்கான சீட்டு (TICKET FEE) கட்டணத்தையும், ஒரு நாள்ளுக்கு 5000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment