நாடு பூராகவும் எந்தவொரு இடத்திலும் இடம்பெறும் சட்ட விரோத செயல்களை சுற்றிவளைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் சற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த குற்றச்செயல்களை தடுக்க இயலாமல் போனமை தொடர்பாக அந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இதுவரை 25 பொலிஸ நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கண்டிப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தெடுத்தல் , புதையல் தோண்டல் , சட்ட விரோதமாக ஆடு மாடுகளை ஏற்றிச்செல்லல் உட்பட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிக எண்ணிக்கையினரை கைது செய்து, குறித்த பொலிஸ் நிலைங்களில் ஒப்படைத்துள்ளனர்.
No comments:
Post a Comment