Thursday, March 29, 2012

LLRC அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிககை- ரவூப்

ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் வெற்றி தோல்விகளை மதிப்பிட்டு, காலத்தை வீணடிப்பதை தவிர்த்து, இனங்களுக்கிடையே ஐக்கியத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நீதியமைச்சர் ரவூப் ஹகீம் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ் பாராளுமன்ற உயர் சபை அங்கத்தவரும், இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் நெஸ்பியை சந்தித்த போதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இங்கு ஆராயப்பட்டது.குறித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, அராசங்கம் நடவடிககை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், சில தீவிரவாத குழுக்களின் செயற்பாடு இதற்கு தடையாக அமையலாமென்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். யுத்தம் காரணமாக, யாழ்ப்பாணம் மன்னார் உட்பட ஏனைய பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடாபாகவும், இங்கு கவனம் செலுத்தப்பட்டது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்க, தேவையான சீர்த்திருத்தங்கள், விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும்,அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



No comments:

Post a Comment