மாணவர்களுக்கு விற்னை செய்யப்படவிருந்த போதையூட்டும் மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டன!
கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் போது மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதையூட்டும் ஒருதொகை மருந்து வகை தேசிய வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்து வகைகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச பிரபல வர்த்தக தொகுதியொன்றில் இயங்கிவந்த மருந்து விற்பனை நிலையமொன்றில் இருந்து இந்த மருந்து தொகை கைப்பற்றப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்து சீட்டின்றி போதையூட்டும் ஒருவித மருந்து விற்கப்படுவதாகபொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, திடீர் தேடுதல் நடத்தப்பட்டு மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மருந்து விற்பனை நிலையத்திருந்து 650 கொரெக்ஸ் டி மருந்துப் போத்தல்களும், சுமார் மூவாயிரம் வில்லைகளையும் கைப்பற்றியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment