அமரர் வீ. பாலசுப்பிரமணியத்தின் சிறப்பு நிறைவு மலர் வெளியீட்டு விழா
கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் அமரர் வீ. பாலசுப்பிரமணியத்தின் சிறப்பு நிறைவு மலர் வெளியீட்டு விழா கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வி. எஸ். இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இரா. பாஸ்கரனின் தலைமையுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், நினைவுப் பேருரையை உடுவை தில்லை நடராசா நிகழ்த்தினார்.
மலராசிரியர் கலாபூசணம் கே. வி. இராமசாமி நூல் பற்றிய உரையினையும், கவிவாழ்த்தினை கலாபூசணம் கே. வெள்ளைச்சாமி மற்றும் கலாபூசணம் பொ. பூபாலன் ஆகியோரும் பாடினார்கள்.
சிறப்புரையினை இணைபணிச் செம்மல் கோ. கிருஸ்ணமூர்த்தி, சாம ஸ்ரீ தேசக்தி அ. தட்சணாமூர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்தினர். அன்னாரின் பாரியாரின் மூலம் அமரரின் படம் திரை நீக்கம் செய்யப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேவாஜோதி எஸ். முத்தையா உட்பட முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- இக்பால் அலி
0 comments :
Post a Comment