திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள், மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, நெல்சன்புரவில் நிர்மாணிக்கப்பட்ட மாடிவீட்டு தொகுதி, நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 4 மாடிகளை கொண்ட, இந்த திட்டத்தில், 80 வீடுகள், காணப்படுகின்றன.
120 மில்லியன் ரூபா, இத்திட்டத்திற்காக, செலவிடப்பட்டுள்ளது. சுனாமியினால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளும், இதன்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், மக்களிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன் நெல்சன்புர நெற் களஞ்சிய தொகுதியையும், அமைச்சர் திறந்து வைத்தார். நெல்சன்புர மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், இதுவரை 6 நெற் களஞ்சியங்கள், நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
3 ஆயிரம் டொன்னுக்கும் மேற்பட்ட நெல்லை, இங்கு களஞ்சியப்படுத்தலாம். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ், நெற் களஞ்சியங்களை நிர்மாணிப்பதற்காக, 17 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அபிவிருததி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம உளளிட்ட பலர், கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment