ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
ஜெனீவா பிரேரணை மற்றும் சர்வதேச சூழ்ச்சியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள மக்களுக்கு அறிவுறுத்தும் செயல்த்திட்டங்கள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஊடாக அறிவுறுத்தல்களை மேற்கொள்வதே இத்திட்டமாகும். இதன்படி துண்டு பிரசுரங்கள் விநியோகத்தின் மூலம் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இலங்கைக்கு எதிரான சூழ்ச்சி தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதற்கு புறம்பாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடவுள்ளனர்.
வெளிநாடுகளில் செயற்படும் சிங்கள ஐக்கிய அமைப்பு மற்றும் மேலும் பல அமைப்புக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த செயற் திட்டங்களுக்கு குறித்த நாடுகளில் வசிக்கும் பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதே வேளை இத்தாலியில் மிலானோ நகரில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை;கு எதிராக அமெரிக்காவின் செயல்பாடுகளும் மனித உரிமை பேரவையின் உத்தேச பிரேரணையையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மட்டுமல்லாமல் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment