வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை, நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஐயாயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும்,இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார் .
சீதுவை பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த பெரேரா என்பவரே பிரணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் சீதுவை பிரதேசத்தை சேர்ந்த தேவி பீரிஸ் என்பவராவார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த சந்தேக நபர் வழக்கின் முறைப்பாட்டாளரையும் அவரது மகளையும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி, லொறியில் மோதி கொலை செய்ய போவதாக அச்சுறுத்தியுள்ளதாக சீதவை பொலிஸார் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment