மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வரும் வர்த்தமாணி விரைவில்
மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வருவதற்கான வர்த்தமாணி விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுகாதார, கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒளடதங்களுக்கான கட்டுப்பாட்டு விலை விரைவில் அமுல்படுத்தப்படும். இது தொடர்பான வர்த்தமாணியை வெளியிடும் உரிமை வர்த்தக அமைச்சுக்கே உள்ளது.
முதலில் அத்தியாவசியமற்ற மருந்துகளின் விலைகள் வர்த்தமாணியில் வெளியிடப்படும். அதன் பிரதிபலன்கள் என்ன எனபது தொடர்பாக நாங்கள் ஆராய்வோம். அதனையடுத்து நாங்கள் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்வோம்.
அதன் பின்பு நாங்கள் அத்தியவசிய மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை வர்த்தமாணியில் வெயியிடுவோம். அனைத்து மருந்துகளையும் ஒரே நேரத்தில் வர்த்தமாணியில் வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் பிரச்சினைகள் ஏற்பட்டால் நோயாளர்களை பாதிப்பதுடன் உயிர் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும். இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும் நாமும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு அடுத்த வாரம் இறுதி தீர்மானத்திற்கு வருவோம் என்றார்.
0 comments :
Post a Comment