மீனவர்களின் விடுதலை தொடர்பில் சோமாலியா- விலிருந்து குழுவொன்று வருகிறதாம்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோமாலியாவிலிருந்து எதிர்வரும் வாரத்தில் குழுவொன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது .
அந்த குழுவினர் இதற்கு முன்னர் இலங்கைக்கு உதவி புரிந்துள்ளதாகவும், அந்த குழுவினருடனான .பேச்சுவார்த்தைகளின் பின்னர் எமது நாட்டு குழுவொன்று சோமாலியாவுக்கு செல்லவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய ஆறு மில்லியன் அமொரிக்க டொலர்கள் கப்பமாக கேட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment