Saturday, March 24, 2012

மறைந்த ராஜேஸ்வரி சண்முகம் அவர்கட்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும் உலகப்புகழ்பெற்ற வானொலிக் கலைஞருமான வானொலிக் குயில் ராஜேஸ்வரி சன்முகத்தின் மறைவு குறித்து இலங்கை நெற் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. பிச்சாண்டிப்பிள்ளை அன்னாமலை அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக 1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி கொழும்பு விவேகானந்த மேட்டில் பிறந்த இவர் இரண்டு சசோதரர்கள், இரண்டு சகோதரிகளையும் கொண்டுள்ளார். இவரது கணவர் அமரர் சீ சன்முகமும் இலங்கை வானாலியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர். இத்தம்பதியினருக்கு 3 பிள்ளைகள். அவர்களும் கலைத்துரையில் ஈடுபாடு கொண்டவர்கள்.

ஸ்ரீ கதிரேசன் வீதி புனித மரியால் வித்தியாலயத்தில் ஆங்கில மொழிமூலம் கல்விகற்று பின்னர் நெல் வீதி அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். தனது 14வது வயதில் 1952 ஆம் ஆண்டு வானொலிக்கலைஞராக அறிமுகமான இவர் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்துள்ளார்.

மேடை நாடகத்தின் மூலம் தனது கலையுலக வாழ்க்கையை ஆரம்பித்த திருமதி ராஜேஸ்வரி சன்முகம் வானொலி நிகழ்ச்சிகளினூடாக ரசிகர்கள் மனதில் ஆழமாக வேரூன்றியவர். வானொலிக்குயில் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திருமதி ராஜேஸ்வரி சன்முகம் பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இலங்கையில் மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளிளும் புகழ்பெற்றவர். அன்னாரின் மறைவு கலை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது பிள்ளைகள் குடும்பத்தினர் கலையுலக நன்பர்கள் ரசிகர்கள் வானொலி நேயர்கள் அனைவருக்கும் இலங்கை நெற் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com