ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை நாட்டிலிருந்து துரத்தியது தானே என்கிறார் மேவின்
ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை இலங்கையிலிருந்து துரத்தியது நான் தான் என அமைச்சர் மேவின் சில்வா இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். கிரிபத்கொடையில் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போத்தல ஜயந்த இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையில் காட்டிக் கொடுத்தார். சுனந்த தேசப்பிரிய, நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகிய ஊடகவியலாளர்களையும் எச்சரிக்கிறேன்.
பாக்கியசோதி சரவணமுத்து இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை சர்வதேசத்திற்கு வழங்கியவராவார். சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் ஏலத்திற்கு விடுவதற்கு யாராலும் முடியாது என்று அமைச்சர் மேவின் சில்வா அங்கு தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment