Thursday, March 29, 2012

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்குமாறு தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையிலான கடற்பரப்பிலுள்ள இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கடற்பகுதியை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றம் அறிவித்திருந் ததையடுத்து தமிழக முதல்வர் தமது கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முன்வைத்துள்ளார்.

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை இந்திய உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தமிழக அரசு தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி தனியான மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இராமர் பாலம் என்று அழைக்கப்படும் பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படக்கூடாது என கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடரப்பட்டுள்ளதையும் அவர் இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் இராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாது தனுஷ்கோடி விழியாக சேதுசமுத்திர திட்டத்தை முன்னெடுக்க கூடிய சாத்தியம் குறித்து ஆராய்வதற்காக இந்திய பிரதமர் நியமித்த நிபுணர் குழுவிடம் தமிழக அரசு தமது நிலைபாட்டினை கையளிக்கவுள்ளது.

இந்திய இலங்கைக்கு இடையிலான கடற்பரப்பை அகலப்படுத்தி கப்பல்கள் செல்ல வழியேற்படுத்தினால் வங்கக்கடலுக்குச் செல்ல வேண்டிய கப்பல்கள் இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment