பல்கலைக்கழக கல்வி சார ஊழியர்களது போரட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற பகிஷ்கரிப்பு நேற்றைய தினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளவுயர்வு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தடவை பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.
ஆயினும் இவர்களது போரட்டத்திற்கு உரிய தீர்வுகள் கிடைக்காததால் நேற்று முன்தினம் காலை முதல் காலவரையறையற்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவர்களின் இந்த காலவரையற்ற பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஇ 975ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கு அமைவாகவும்இ மேலதிகமாகவும் 10சதவீதம் சம்பளவுயர்வு வழங்க இணங்கியுள்ளது.
இது தொரடபான விடயத்தினை சுற்றுநிருபம் எதிர்வரும் 03ஆம் திகதி வெளியிடும் என பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதியளித்தது போன்று நடக்க தவறுமாயின் மீண்டும் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment