மாத்தறை இரகசியமாக இயங்கி வந்த போலி கச்சேரி முற்றுகையிடப்பட்டது.
மாத்தறை பொப்பராவத்தையில் நீண்டகாலமாக இரகசியமான முறையில்
செயற்பட்டு வந்த போலிக்; கச்சேரி ஒன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்த போலி ஆவணங்கள் யாவும் கைப்பற்ப்பட்டன.
அம்பலாந்தோட்டை விசேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் மாலன் பிஹேரா தலைமையிலான பொலிஸார் இந்த முற்றுகையை மேற்கொண்டனர்.
சந்தேக நபர் ஒருவர் இதன் போது கைது செய்யப்பட்டார். பாடசாலை அதிபர்கள், சட்டத்தரணிகள், காணி ஆணையாளர்கள், அரச அதிபர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பெயருடன் கூடிய போலி த்தியோகபூர்வ முத்திரை சின்னங்கள் இங்கு கைப்பற்றப்பட்டன.
இதில் போலி அடையாள அட்டை தாயாரிப்பதற்காக வழங்கப்பட்ட 25 பேரின் புகைப்படங்களும் இவற்றில் அடங்கும்.
எந்தவொரு ஆவணம் அல்லது சான்றிதழை தயாரிப்பதற்கான முழமையான போலி விண்ணப்பங்களும் இங்கு காணப்பட்டன. சந்தேக நபர் இதற்கு முன்னரும் இதே குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவராவார்.
0 comments :
Post a Comment