மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே கலந்துரையாடல்
நீர்கொழும்பு மற்றும் சிலாப பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அந்த பிரதேச மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றது
கர்டினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பங்கு தந்தைகளுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது நீர்கொழும்பு மற்றும் சிலாபம் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறுமீன்பிடி படகுகளுக்கு மானிய அடிப்படையில் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை 250 லீற்றரிலிருந்து 375 லீற்றர்களாக அதிகரிக்குமாறும் ஆழ்ககடல் மீன்பிடிப் படகுகளுக்கான மானிய அடிப்படையிலான டீசலை 100 லீற்றர்களால் அதிகரிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment