Friday, March 30, 2012

சர்வதேச மனித உரிமைகள் பேரவையுடனான தொடர்புகளை இஸ்ரேல் துண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாடு நிறைவடைந்ததை பல சர்வதேச நாடுகளில் நெருக்கடிகள் தலைதூக்கியுள்ளன. இதன் விளைவாக சர்வதேச மனித உரிமைகள் பேரவையுடனான சகல தொடர்புகளையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது.

இஸ்ரேல் பிரஜைகளும் படையினரும் மேற்கு கரையில் உள்ள குடியிருப்புக்களை அகற்றியதன் மூலம் பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு அண்மையில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேணையொன்று நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகள் செலுத்தப்பட்டன. 10 நாடுகள் வாக்களி ப்பிலிருந்து தவிர்ந்து கொண்டன. எனினும் அமெரிக்கா மாத்திரம் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. இந்த பிரேணை நிறைவேற்றப் பட்டமையினால் இஸ்ரேல் கவலையடைந்துள்ளது.

இப்பேரவையின் இரட்டை வேடம் தொடர்பாக அதிர்ப்தி அடைந்துள்ள இஸ்ரேல் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் சகல உறவுகளையும் துண்டித்துக் கொண்டது.



No comments:

Post a Comment