Friday, March 30, 2012

தனியார் மருத்துவமனை வைத்தியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதகரகமொன்றைச் சேர்ந்த பெண்ணொருவர் கையில் ஏற்பட்ட நோவிற்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள தனியார் மருத்துவமனையொன்றை சென்றபோது அங்கு வைத்தியர் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியதாக குறிப்பிட்ட பெண் கொள்ளு ப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வைத்தியரை கைது செய்வது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு கொள்ளுபிட்டி பொலிஸாருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பெண்ணொருவர் தனது கை வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்றதாகவும் அங்கு வைத்தியர் ஒருவர் தன்னை மருத்துவமனையில் உள்ள சோதனை அறையொன்றுக்கு அழைத்துச்சென்று தன்னை முறையற்ற விதமாக பாலியல் தொந்தரவு செய்ததாகவும சோதனை அறையில் பெண் தாதியர் எவரும் இருக்கவில்லையென்றும் குறிப்பிட்ட பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைக் குறிப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு நீதவான் கனிஷ் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment