முல்லைத்தீவில் ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், புலிகளினால் இந்த ஆயுதங்கள், முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வவனியா பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின்போது, இவ்வாயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சக்தி வாய்ந்த 9 கிளைமோர் குண்டுகள், 3 ஆர்.பீ.ஜி. ரொக்கெட்டுக்கள், இரண்டு கைக்குண்டுகள் ஆகியன, மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி தலைமையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
0 comments :
Post a Comment