போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்ற பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
14 போலி தங்க வளையல்களை வங்கி கிளை ஒன்றில் அடகு வைத்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட 24 வயதுடைய பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன 10 வருட காலம் ஒத்திவைத்த 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 30 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார் .
இதற்கு மேலதிகமாக குறித்த வங்கிக்கு இரண்டு இலட்சத்து 79 ஆயிரம் ரூபா நஷ்டயீடாக வழங்குமாறும் பிரதிவாதிக்கு நீதவான் உத்தரவிட்டார் .
பிரதிவாதியான பெண் இரண்டு சந்தாப்பங்களில் இந்த போலி நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது இவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment