இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசின் இணை அமைச்சரான வி.நாராயணசாமியை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சேவை இது தொடர்பாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஒரு போதும் இணக்கம் தெரிவிக்காதென அச்செய்தி சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா எந்தவொரு நாட்டுடனும் இணக்கப்பாடுடன் செயற்பட போவதில்லையெனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார.; ஆனால் இலங்கைக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பது அநீதியானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்ரிரிஈ பயங்கரவாதம் இலங்கை அரசினால் மனிதாபிமான நடவடிக்கை மூலம் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை அமுல்ப்படுத்தியுள்ளது.
இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் நாட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்;.
தமிழ் நாடு முதலமைச்சர் ஜெலலிதா, தி.மு.க தலைவர் கருணாநீதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை விடயம் தொடர்பில் முரண்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment