இலங்கைக்கு எதிராக சர்வதேச சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு எதிரப்பு தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். தாயகத்திற்கு எதிரான சர்வதேச சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்ச்சிகளை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்றனர். மாவட்டத்தின் 4 திக்குகளிலிருந்தும் ஊர்வலமாக கிளிநொச்சி நகருக்கு வருகை தந்த மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்திற்கு ஊறூ விளைவிக்க ஒரு சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு தற்போதைய அரசாங்கமே சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தாகவும், அரசாங்கத்துடன் இணைந்து உயிரை தியாகம் செய்தாவது வெளிநாட்டு சக்திகளை தோல்வியடையச் செய்வதற்கு தயாராக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனனர்.
இதேநேரதம் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாமெனவும் பிரபாகரனுடன் பயங்கரவாதம் அழித்தொழ்க்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் உண்மையான சுதந்திரம் மலர்ந்துள்ளதாகவும் தமிழ் வர்த்தகர்கள் சர்வதேசத்திற்கு ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய அமைதி சூழ்நிலை தொடர்பாக இந்தியா அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அறிவுறுத்தும் வகையில் விசேட ஊர்வலம் ஒன்று கொழும்பு காலி முகத்திடலில் இன்று தமிழ் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தாயகத்திற்கு எதிரான சர்வதேச சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காகவும், தமிழ் வர்த்தக சமூகத்தினரால் இன்று பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட தூதரகங்களுக்கு அறிவுறுத்தும் முகமாகவும் விசேட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. இலங்கையில் மூவின மக்களும் ஐக்கியத்துடன் வாழ்வதை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதே இவ் ஊர்வலத்தின் நோக்கமாகும். ஜனாதிபதியினால் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டதன் பின்னரே உண்மையான சுதந்திரம் நாட்டிற்கு கிடைத்ததென்பது இவர்களின் நிலைப்பாடாகும். இதனை அனைத்து தூதரகங்களுக்கும் அறிவுறுத்துவதற்காகவே இந்த ஊதர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment