காவத்தையில் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரின் வீட்டுக்குத் தீ
காவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடையது எனக் கூறப்படும் கொட்டகெத்தன பகுதியில் உள்ள வீடு உட்பட இரண்டு இனந் தெரியாத சிலர் தீயிட்டுள்ளனர்.
இந்த வீட்டுகளின் மீது இன்று பிற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் தீயினால் வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ வைக்கப்பட்ட வீடுகளில் ஒன்று காவத்தை பிரதேச சபையின் தலைவருடையது என தெரியவருகிறது.
அத்துடன் பிரதேச மக்கள் காவத்தை பகுதியில் டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அங்கு தற்போது பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் 72 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சாட்சிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment