இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு- வந்துள்ள பிரேணை நகைப்புக்குரிய நாடகமாம்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை ஜெனீவா மாநாட்டில், நிறைவேற்றப்பட்டமை, முழு உலகிற்கும் வழங்கிய பிழையான முன்னுதாரணமென, தெரிவித்துள்ள ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டு, பிளவுபட்ட உலகிற்காக, நகைச்சுவை நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன வலையமைப்பின் சகல அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைகள் மற்றும் சித்தாத்தங்கள் இதனூடாக, மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மாநாட்டின் இறுதியில் உலக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை, ஒரு சில வாக்குகளினால், மனித உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இதனூடாக, பலம் வாய்ந்த நாடுகள், ஏனைய நாடுகளுக்கு ஆதரவு வழங்கும் விதம், ஒரு ரகசியமல்ல. சகல விதத்திலும், பக்க சார்பான செயற்பாடுகள், அச்சுறுத்தல்கள், தடைகள், நிபந்தனைகள் ஆகியவற்றை விதிப்பதன் மூலம், திட்டமிட்ட பொய்யான பிரசாரங்களை பரப்பும் நிகழ்ச்சிகளையும், இலங்கை வன்மையாக நிராகரித்துள்ளது.
இலங்கையை அபகீர்த்திக்கு உட்படுத்த இந்த சகல நிகழ்ச்சிகளும், முயற்சித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றுடன் அபிவிருத்திப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் பயணத்திற்காக, ஒரு நாடு என்ற வகையில், இலங்கை இன்று முன்னுதாரணமாக திகழ்கின்றது.
மேற்கு நாடுகள் பல்வேறு அழுத்தங்களை திணிக்கும்போது, அதற்கு எதிராக, இலங்கை திடமான நிலைப்பாட்டில் இருந்து வந்தது. எமது இறைமை, சுதந்திரம், ஒருமைப்பாடு, ஆகியவற்றுக்கு சுதந்திர தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை எமக்கு இல்லையா என, மனித உரிமை மாநாட்டில், அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும், சமாதானத்தினூடாக, நல்லிணக்கத்தை நோக்கி செல்லும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளை, திடமாக நடைமுறைப்படுத்தப்போவதாகவும், தமரா குணநாயகம் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment