புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை வெளிக்கொண்டு வரபுதிய இணையம் ஆரம்பம்
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு புலிகளுக்கான ஆதரவுச் செயற்பாடுகளை மேற்கொள்ளபவர்களுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளுக்காக புதிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள் அமைப்பு என்னும் அமைப்பினாலேயே இவ்விணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் அவர்களது வன்முறைகள் பொது மக்களுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பயங்காரவாத நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விளக்கமளிப்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜரோப்பிய நாடுகள் அமெரிக்கா சுவிஸ்லாந்து கனடா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் வாழுந்து கொண்டு தமிழீழ கொள்கையுடன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக வெளிநாடுகள் புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகவுள்ளது
இந்த இணையத்தில் புலிகள் மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் ஏனைய பங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றை நீங்களும் கீழ் காணும் இணைத்திற்கு நேரடியாகச்சென்று பார்வையிட முடியும்.
www.stopltte.com
0 comments :
Post a Comment