வத்தளை பிதேசத்தில் கடலில் மூழ்கி இளைஞர் பலி
வத்தளை பிரீதிபுர கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
நேற்று சனிக்கிழமையன்று நண்பர்களுடன் குறித்த கடலில் நீராடச் சென்ற 19 வயதுடைய லக்மால் மதுசங்க என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமால் ரத்நாயக தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நீரில் மூழ்கிய அந்த இளைஞன் இன்று காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
0 comments :
Post a Comment