வரதட்சணை கொடுமை – இஸ்லாமிய இளம்பெண் எரித்து கொலை!
ஊர் தலைவர் உடந்தையா? – தற்கொலை முலாம் பூசப்பட்டு நள்ளிரவில் நல்லடக்கம்? கொலைகார்களுக்கு எந்த தண்டனையும் இல்லை!
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகா, சேதுவாசத்திரம் போஸ்ட், செந்தலை
என்றழைக்கப்படும் செந்தலை பட்டிணம் என்ற கிராமத்தில் (புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி என்ற ஊரிலிருந்து 3 கிமீ) திருமண மாகி, 9 மாத கை குழந்துடன் உள்ள 19 வயதுடைய, இஸ்லாமிய இளம் பெண் (தந்தை பெயர் ஜெய்னுலாபுதீன்), வரதட்சணைக்காக அதே ஊரை சேர்ந்த தனது மாமியாரால், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அன்று எரித்து கொலை செய்யப்பட்டார்.
இது தற்கொலை என்று ஊர்ஜமாத்தால் முடிவு செய்யப்பட்டு, தலைவாரால் தலையாட்டப்பட்டு, பெண்ணின் பெற்றோர் மட்டும் கதறி அழ, ஊர் கட்டுபாடு என்று, இரவு 2 மணிக்கு, அடக்கம் செய்யபட்டார். அந்த 9 மாத கை குழந்தை?
இந்த ஊரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் சேதுவா சமுத்திரத்தில் காவல் நிலையம் உள்ளது. அதனை அடுத்து 13 கி.மீ தூரத்தில் பேராவூரணியில் காவல் நிலையம் உள்ளது. ஆனால் பிரயோஜனம் இல்லை.
உயிருக்கு போராடிய அந்த பெண்ணை பெண்ணிண் பெற்றோர் தஞ்சாவூரில் உள்ள
மருத்துவமணைக்கு கொண்டு செல்ல, பின்பு மதுரை மருத்துவணைக்கு கொண்டு செல்ல
அங்கேயும் பலனின்றி உயிர் பிரிந்தது, மருத்துவமனைக்கு அலைந்த அந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று அந்த வரதட்சணை கொடுமைக்காரிக்கு தண்டணை வாங்கி கொடுத்து இருக்கலாம்.
இங்கே நடந்த இந்த வரதட்சணை கொலை குற்றவாலிகள் மூன்று பேர்.
முதல் நபர் செந்தலை கிராம ஜமாத் மன்ற தலைவர்,
இரண்டாவது நபர் எரித்து கொலை செய்த மாமியார்.
மூன்றாவது நபர் இந்த கொலைக்கு பின்பு சார்ஜாவிலிருந்து ஊர் சென்றுள்ள
அந்த பெண்ணின் கணவர்.
விளக்கம்:
1- ஜமாத் தலைவர் – இஸ்லாத்தில் இல்லாத வரதட்சணையை ஜமாத்தே தூண்டுவது,
கைகூலியாக மணமகன் பெறும் பணத்திற்கு கமிஷன் அடிப்படையில் பள்ளிவாசலுக்கு
நன்கொடை வசூலிப்பது., வரதட்சணை கொடுமைகள் ஏற்படும் போது, கமிஷன் வாங்கிய
நன்றி கடனுக்காக செயல்படுவது.
2- பவுண், பணம், பாத்திர சாமான்கள் குறைவாக கொண்டு வந்த ஒரே
குற்றத்திற்காக அந்த அப்பாவி பெண்ணை எரித்து கொலை செய்த அந்த மாமியார்.
3- தனது தாயார் என்ன செய்தாலும், எப்படி திட்டினாலும், தனது வீட்டை
விட்டு போகக் கூடாது என்று கண்டிஷன் போட்டு வீட்டிலையே முடக்கி வைத்த
கணவன்.
அந்த பெண் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர், கணவனுக்கு தற்போது வசதி வந்து புதிய வீடும் கட்டிவிட்டார். ஆனால், மனைவி …பழைய மனைவி. குறைவாக கொடுத்து
வந்தவள், புதிய திருமணம் செய்தால் .. நிறைய கிடக்கும். இது திட்டம். இந்த
திட்டம் ஜமாதின் துணயுடன் அழகாக நிறைவேறி உள்ளது.. மணமகன் கை கூலி
அதிகமாக பெற்றால், பள்ளிவாசலுக்கு கமிஷனும் அதிகமாக கிடைக்குமே? இது ஊர்
தலைவரின் திட்டம். இந்த திட்டம் இன்னும் எத்தனை இஸ்லாமிய பெண்களை
உயிருடன் எரிக்கப் போகிறதோ?
தன்னார்வம் கொண்ட அனைத்து இயக்க சகோதரர்களே, பொது நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களே, இது போன்ற கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்!
இவர்களை இறைவன் தண்டிப்பான் என்று நாம் சமாதானம் கொள்வதால் தான் இது
போன்ற சதிகள், கொலைகள், வரதட்சணை கொடுமைகள் சர்வ சாதாரணமாக
அரங்கேறுகின்றன.
இந்திய அரசியலைப்பு படியும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். காரணம் என்ன? – இஸ்லாமிய விழிப்புணர்வு இல்லாமை?, ஊர் கட்டுபாடு என்ற பெயரில் தலையாட்டுவது? வரதட்சணை என்ற இழிவை, கேவலமாக என்னாமல் – கெளரவமாக நினைப்பது.. இதற்கு ஊர் ஜமாத், முத்தவல்லி துணைபோவது.
இஸ்லாமிய உணர்வும், மறுமையை குறித்த பயமும் இருந்தால், இது போன்ற
சம்பங்கள் இன்ஷா அல்லாஹ் இருக்காது!?
(மேற்கண்ட தகவலை, அமீரக சார்ஜாவில் என் கூட எனது ரூமில் தங்கி இருக்கும்,
செந்தலை கிராமத்திற்கு தொடர்புடைய சகோதரரின் வாக்கு மூலத்தை கொண்டு, இந்த
செய்தி என்னால் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
அன்புடன்
தோப்புத்துறை ஹாஜாதீன் – சார்ஜா, துபாய்.
1 comments :
இப்படிப்பட்ட கீழ்த்தரமான மனித வதை, கொடுமையை இந்த நாகரிக உலகில் மன்னிக்க முடியாது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு அதே தண்டனை ஊர்மக்களால் வழங்கப்பட வேண்டும்.
அதுவே ஒரு படிப்பினையாக எல்லோருக்கும் இருப்பதாக.
Post a Comment