ஐ.நா. தீர்மானத்தின் எதிரொலி அமெரிக்க பொருட்களுக்கு இலங்கையில் எதிர்ப்பு!
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இலங்கையில் புலிகளுடன் உச்ச கட்ட போர் நடந்த போது, மனித உரிமைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த 22ம் தேதி நிறைவேறியது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பு உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் போது , கோதுமை மா, கோக கோலா, பெப்சி போன்ற எந்த அமெரிக்க பொருளையும் பயன்படுத்த வேண்டாம். அமெரிக்க பொருட்களை ஒழிப்போம், புறக்கணிப்போம் என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் குணதாசா அமரசேகரா கூறுகையில், அமெரிக்க பொருட்களை நாங்கள் புறக்கணிப்பதை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான எண்ணத்தை இலங்கை மக்களிடம் அதிகரிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment