நீர்கொழும்பு பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் (படங்கள்)
நீர்கொழும்பு கோட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் போட்டி நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை (9-3-2012) பிற்பகல்2 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின்விளையாட்டு மைதானத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.ஸி.பி. பெர்னாந்து தலைமையில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் நீர்கொழும்பு வலய உடற்கல்விப் பணிப்பாளர் காமினி பெர்னாந்து விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
நீர்கொழும்பு கோட்டத்தில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகள் இந்த போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றின.
மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் அங்கு இடம் பெற்றன.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment