நீர்கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும் - மேல்மாகாண அமைச்சர்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும். மாநகர சபையின் கீழ் செயற்படும் முன்பள்ளி பாடசாலைகள் , தாய் சேய் நலன் பிரிவு , கழிவகற்றல் , மைதானங்கள் , சந்தைகள் இவை யாவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன .
நீர்கொழும்பு மாநகர சபையின் புனரமைப்பு செய்யப்பட்ட நிதிப்பிரிவு அலுவலகத்தை இன்று (8) காலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, மேல்மாகாண சபை வீதி அபிவிருத்தி , வீடமைப்பு ,நிர்மாணம் , மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல்லான்ஸா குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.
காமச்சோடை வாராந்த சந்தை 130 மில்லியன் ரூபா செலவிலும் , நீர்கொழும்பு இரவுச்சந்தை 160 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைப்பு செய்யப்படும் . அத்துடன் 800 மல்லியன் ரூபா செலவிடப்பட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படும் . நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்கா 1940 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்படவுள்ளது .
அத்துடன், நகரில் உள்ள சகல வீதிகளும் கார்பட் செய்யப்படும் . ஆசியாவில் உள்ள மிகச்சிறந்த வாசிகசாலையாக நீர்கொழும்பு மாநகர சபை பூமியில் அமைந்துள்ள வாசிகசாலை நவீன மயப்படுத்தப்படும் என்றார்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment