வீசா இன்றி நாட்டில் தங்கியிருப்போரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம்.
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்வதற்கு விசேட செயல்திட்டத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ள அதேவேளையில் வீசா அனுமதியின்றி சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை 011 5329 000 அல்லது 011 325 490 அல்லது 011 325 380 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment