Friday, March 30, 2012

யாழ் மீன்பிடி தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - கடற்தொழில் திணைக்களம்

குருநகர் மற்றும் பூநகரி பகுதிகளில் சிறு வலைகளால் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களின் வலைகள் மற்றும் உபகரணங்கள் இழுவைப் படகினால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தொழிலை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், வருமானமும் இழக்கப்படுவதாகவும் சிறுதொழிலாளர்கள் கடற்தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இவர்களின் முறைப்பாடு தொடர்பாக தொழிலாளர்கள் நலன்களைக் கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment