ஜெனிவா சென்ற சமரசிங்க குழுவினர் நாடு திரும்பினர்: இலங்கைக்கு எதிரான அபாயம் நீங்கவில்லை
ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெனிவா சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் இலங்கை பிரதி நிதிகள் குழுவினர்இன்று காலை நாடு திரும்பினர்.
கடந்த இரண்டு வருடத்திற்குள் இலங்கை அடைந்துள்ள வளர்ச்சி தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகளில் அனேகமானோர் திருப்தி அடைந்ததாகவும், இலங்கை தொடர்பாக சில நாடுகள் வைத்திருந்த தப்பபிப்பிராயத்தை இந்த கூட்டத் தொடரின் போது நீக்க முடிந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கை தொடர்பாக நாடுகள் பல திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பட்டதாகவும் லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment