Saturday, March 17, 2012

அமெரிக்க சிறுமிகளிடம் செக்ஸ் கொடுமை: இந்தியா தப்பிச் சென்ற பாதிரியார் கைது!

அரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் பழனிவேல் (வயது 57). பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். அப்போது விடுதியில் தங்கி இருந்த அமெரிக்கா சிறுமிகளிடம் ஜெயபால் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்கா ரோசாசிட்டி போலீசார் பாதிரியார் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். இதை அறிந்த ஜெயபால் இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்துவிட்டார். இது குறித்து அமெரிக்கா போலீசார் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து டெல்லி இன்டர்போல் போலீசார் பாதிரியார் குறித்து விசாரித்து வந்தனர். அதில் பாதிரியார் ஜெயபால் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கைது வாரண்டு பெற்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் அமெரிக்கா தேடிய ஜெயபால் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சிமிட்டஹள்ளி தேவாலயத்தில் அந்தோணி சாமி பாதிரியாளரிடம் உதவியாளராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிமிட்டஹள்ளியில் பதுங்கி இருந்த ஜெயபாலை கைது செய்தனர். கைதான பாதிரியார் கூறும்போது, நான் எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு. அமெரிக்காவில் நடந்து வரும் கறுப்பர் இனத்தை வைத்து பிரச்சினை ஜோடிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெயரை கெடுப்பதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை எனது வக்கீல் மூலம் சந்திப்பேன் என்றார். கைதான பாதிரியார் ஜெயபாலை இன்று காலை 8 மணிக்கு ஈரோடு போலீசார் ரெயில் மூலம் சென்னை அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப் படுகிறார். அங்கு கைது வாரண்டு பிறப்பித்த டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் விசாரணைக்காக அமொ¤க்கா கொண்டு செல்லப்படுகிறார்.

கைதான ஜெயபால் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஊட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் தமிழகத்தில் இல்லை என சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடி பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com