கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கத்தை வற்புறுத்துமாறும், மேலும் சில வேண்டுகோள் விடுத்தும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட 31 கத்தோலிக்க குருமார்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கால வரையறை ஒன்று நிர்ணயித்து, நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அதன் பரிந்துரைகள் அமுலாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும்,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மை நிலை ஏற்க்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை , இந்த கடிதத்தில் உள்ள கருத்து, ஒட்டுமொத்த திருச்சபையின் கருத்து இல்லை எனவும், இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டவர்களின் கருத்து மாத்திரமே எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையில், ஏனைய தமிழ் கத்தோலிக்க ஆயர்களின் கையெழுத்துக்களை தம்மால் பெற முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment