நீர்கொழும்பு பதில் மேயராக சகாவுல்லாஹ் நியமனம்
நீர்கொழும்பு மாநகர சபையின் பதில் மேயராக எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேயர் அன்ரனி ஜயவீர வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மேயர் நாடு திரும்பும்வரை இன்று (16) முதல் நீர்கொழும்பு மாநகர சபையின் பதில் மேயராக பிரதி மேயர் சகாவுல்லஹ் தற்காலிகமாக கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரான எம்.எஸ்.எம்.சகாவுல்லாஹ் கடந்த மாநகர சபை தேர்தலில் 8942 விருப்பு வாக்குகள் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment