Sunday, March 4, 2012

உழைக்கும் பெண்கள் முன்னணி முக்கிய பிரேரணைகள் நிறைவேற்றம்.

இலங்கையின் முதல் பெண் தொழிற் சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள உழைக்கும் பெண்கள் முன்னணி சர்வதேச பெண்கள் தினத்தை தினத்தை முன்னிட்டு இன்று கீழ்காணும் பிரேரணைகளை முன்வைத்தன. உழைக்கும் பெண்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மகளீர் தினத்தை முன்னிட்டு நடத்திய நிகழ்வு இன்று கண்டி தபால் நிலைய மண்டபத்தில் உழைக்கும் பெண்கள் முன்னணயின் பொதுச் செயலாளர் கி. லோகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதற்குப் பிரதம அதிதியாக திருமதி சிவபாக்கியம் குமாரவேலு கலந்து கொண்டார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பெ. முத்துலிங்கம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தனியார்துறை, ஸ்தாபனமயமற்ற மற்றும் முறைசாரா துறைகளில் பணிபரியும் பெண் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உ.பெ.மு. அண்மைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வை பெற்றுத் தரும்படி தனியார்துறையையும், அரசாங்கத்தையும் கோருகின்றது.


தனியார் துறையின் கடை மற்றும் பாரிய சிறப்புச் சந்தை நிலையங்களில் பணிபுரியும் பெண்கள் கிழமை ஏழு நாட்களும் சேவை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையால் அவர்களது தொழில் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. ஆகையால் தற்போதுள்ள கடை பணிமனைச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள வார இறுதியில் விடுமுறை நாளொன்றை கட்டாயமாக்கும்படி தனியார் துறையினரையும் அரசையும் கோருகின்றது.

உலக தொழிலாளர் ஸ்தாபனம் அண்மையில் வீட்டுப்பணிமனைத் தொழிலாளர்களுக்காக பிரகடனப்படுத்திய ஊ 189 சமவாயத்தில் கைச்சாத்திட்ட எமது அரசாங்கமானது உடனடியாக தேசிய ரீதியில் வீட்டுப் பணியாளர்களுக்கான சட்டமொன்றினைக் கொண்டு வரும்படி அரசாங்கத்தைக் கோருகின்றது.

கடைப் பணிமனைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தொழில் உரிமைகளை முறையாக நடைமுறைப்படுத்தவதற்கு நடவடிக்கை மேற்கோள்ளும்படி அரசாங்கத்தை கோருகின்றது.

நாட்டின் அரசியலபை;புக்கு அமைய, தனியார் துறை தொழிலாளர்கள் ஒன்று சேருவதற்கான தொழிற்சங்க உரிமையை நிலைநிறுத்துவதற்கு அரசை கோருகின்றது.

தோட்டத்துறை பெண் தலைவிகள் தமது பிரச்சினைகளை தோட்ட முகாமையாளருடன் பேசுவதற்கு வசதியாக அவர்களுக்கு அரை நாள் சம்ளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கும்படி தொழில் வழங்குனர் சம்மேளனத்திற்கு கூறுகின்றது.

தோட்டத் தொழிலாளர் தமது சிறப்பு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பெண் அதிகாரியை நியமிக்கும்படி அரசை வேண்டுகிறது.

பெண்கள் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் பாராளுமன்றத்திலும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களிலும் 33 விகித பிரதிநிதித்துவதை;தை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதி செய்யயும்படி அரசை கோருகின்றது.

அரச பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரச விடுமுறை நாட்களையும், பிரசவ சகாய நிதியையும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தனியார்த்துறை தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்கான சட்டமொன்றை கொண்டு வரும்படி அரசை கோருகின்றது.

பெண்கள் முகம் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்து நிவாரணம் பெறும் வகையில் சிறப்பு பெண் பொலீஸ் பிரிவொன்றை அமைக்குமாறு கோருகின்றது.






No comments:

Post a Comment