Wednesday, March 21, 2012

அமெரிக்காவின் குற்றப் பிரேரணையைக் கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றப் பிரேரணையைக் கண்டித்து நேற்றுக் கொழும்பிலும் கொழும்பை அண்டிய பல பிரதேசங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பல்வேறு துறை சார்ந்த அமைப்புக்கள் கண்டனப் பேரணிகளை நடத்தி வருவதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

நேற்றைய தினம் கொழும்பு கெம்பல் பூங்காவில் நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு மாபெரும் கண்டனப் பேரணியொன்றை நடாத்தியது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணி பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வரை சென்று மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, நேற்றுப் பிற்பகல், சுதந்திர ஊடக அமைப்புகள் ஒன்றி ணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. இதில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் சனல் 4க்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதோடு புலிகளின் கடந்தகால படுகொலைகளையும் கண்டித்து குரல் எழுப்பினர்.

No comments:

Post a Comment