இலங்கை தொடர்பில் அமெரிக்கா வினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அவமானத்திற்கு உட்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணை அரசியல் நோக்கங்களுக்கு உட்பட்டிருந்தமை இதற்கான காரணம் என தெரிவித்த ரஷ்யத் தூதுவர் இலங்கை தொடர்பாக இந்தியாவின் தீர்மானம் தனிப்பட்ட ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்க நாடுகள் பங்கேற்கும் மாநாடொன்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment