ஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு விசாரணை
சவுதி அரேபியா இளவரசர் அல்வால்ட் பின் தலால். உலக கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஸ்பெயினில் உள்ள யாசிட் நகரில் உள்ள இபிஷா என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். அப்போது 20 வயது மாடல் அழகியை கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதை அவர் மறுத்தார்.
இதுகுறித்து ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசர் தலால் மீது கற்பழிப்பு வழக்கு தொடரலாம் என தீர்ப்பு கூறியது. அதை தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment