Wednesday, March 14, 2012

ஏனைய நாடுகளை கட்டுப்படுத்துவதை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது- இந்திய நிதி அமைச்சர்

ஜெனீவா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டுமென தமிழக கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க வின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்ததனால் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த இந்திய நிதி அமைச்சர் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு நாட்டிற்கும் எதிரான பிரேரணைக்கும் இந்தியா ஆதரவு வழங்கியதில்லை எனவும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு இதுவரை திகதி ஒதுக்க்ப்படவில்லையென இந்திய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி தெரிவித்தார்.

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெலலிதா இந்திய பிரதமர் மன்மோகன் சிஙகிற்கு இலங்கை பிரச்சினை தொடர்பாக 2கடிதங்கள் அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment