வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவப்பிரசன்னத்தை குறைக்க இராணுவத்தலைமையகம் தீர்மானித்திருப்பதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுதல் என்பன தொடர்பான களநிலைமைகளை புரிந்து கொண்டு அதன் அடிப்படையிலேயே இராணுவ மறுசீரமைப்பு பணிகள் அடிப்படையிலேயே இக்குறைப்பு இடம்பெறவுள்ளது.
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவப்பிரசன்னம் இன்னமும் குறைக்கப்படவில்லையென்ற விமர்சனங்களின் மத்தயிலேயே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படையணிகள் தலைமையகங்கள் படையினரின் பிரசன்ன எண்ணிக்கையை குறைப்பதோடு அதிகளவு தேவையான தலைமையகங்களில் மட்டும் இராணுவத்தினரது படையணிகளை ஒன்று சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment