பிரதேச அரசியல்வாதியின் தாக்குதலில் இளைஞன் பலி
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் வெலிகெபொல, ஹடன்கல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இந்த இளைஞன் இரத்தினபுரி வைத்தியசாலையில் கடந்த 29ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலைமையிலேயே இளைஞன் வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச அரசியல்வாதியை கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபருக்கு சொந்தமானதாக கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment